Showing posts with label Day. Show all posts

 

குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிமுகமாகியது.



உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு - 2023பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது

சர்வதே சிறுவர் தினம் இன்று. 
சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதுதான் சர்வதேச சிறுவர் தினமாகிய அக்டோபர் 1 ம் திகதியாகும்.
1954ஆம் ஆண்டில் சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை ஐ.நா வலியுறுத்தியது. 18வயதிற்குக் குறைந்த

சகலரும் சிறுவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991ம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றிலொரு பகுதியினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர் எனக் கூறப்படுகின்றது. சிறுவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டங்களின் பங்கினை மறுப்பதற்கில்லை.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் 2008 ஜுன் மாதம் 12ம் திகதி சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறுவர்கள் ஒரு நாட்டினதும்இ ஒரு சமுதாயத்தினதும் அச்சாணி என்பது நாம் அறிந்த விடயம். ஒரு சமூகத்தினது தூண்களாகவும்இ ஒரு நாட்டினது முதுகெலும்பாகவும் செயற்பட இருப்பவர்களும் இவர்களேதான். இவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவார்களேயானால் அந்த சமூகம் அந்த நாடு தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

சிறுபராயம் என்பது ஒரு இனிமையானஇ பெரியோர்களாகிய நாம் அனைவரும் கடந்து வந்த பருவமாகும். இதில் மகிழ்ச்சியடையாத மற்றும் தமது கடந்த கால சிறு பராயத்தினை நினைத்து இனிமையாக அசைபோடாத எவரும் இருக்கமாட்டார்கள்.

எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள் ஆகும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து எனும் வாக்கிற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது.

உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் சர்வதேச சிறுவர் தினமாகிய அக்டோபர் 1ம் திகதியே நினைவு கூரப்படுகின்றன. சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு அமைகின்றன.

• வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை.

• பிறப்பின்போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை.

• பெற்றோரைத் தெரிந்துகொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.

• பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை.

• கருத்தை வெளிப்படுத்தும் உரிமை.

• சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் சமயமொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை.

• சமூக உரிமைஇ தனியுரிமைஇ சுகாதார வசதிகள் பெறும் உரிமை.

• போதிய கல்வியைப்பெறும் உரிமை.

• பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கும் உரிமை.

• பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாக்கும் உரிமை.

• சித்திரவதை/ குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை.

• சாதாரண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை.

• சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை.

இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க அவர்களை நல்வழிப்படுத்த உள்நாட்டு, சர்வதேச ரீதியாக பல நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று சிறுவர்கள் தொடர்பான சட்ட ஒழுங்குகளை ஒவ்வொரு நாடும் கொண்டிருப்பது போன்று சர்வதேச ரீதியாக பல நிறுவனங்கள் சிறுவர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சிறுவர்களுக்கான முதலாவது உச்சிமாநாடு 1990ம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி நடைபெற்றது. இது சிறுவர் சம்பந்தமான முக்கிய தினமாகும். அன்று சிறுவர் இறப்பினையும் போஷாக்கின்மையினையும் 2000 ஆண்டளவில் நீக்குவதற்கான தீர்வு எடுக்கப்பட்டது.

இலங்கையில் அண்மைக் காலம் தொட்டு சிறுவர்களுக்கும்இ அவர்களது உரிமைகளுக்கும் முக்கியத்துவமளிக்கப்பட்டு வருவது கண்கூடு. அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் பலவும் அரச நிறுவனங்கள் பலவும் சிறுவர்களுக்கென பல செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றன.

சிறுவர்களுக்கென பாடசாலை ரீதியாக கற்றல்இ கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் பாடசாலை சிறுவர்களுக்கு பல்வேறு பொருட்களை வழங்குவதுடன்இ சிறுவர் நிகழ்ச்சிகளைஇ விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை வானொலிஇ பத்திரிகை மூலம் வெளிப்படுத்துவதுடன் சிறுவர்களுக்குள் மறைந்து இருக்கின்ற திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சிறுவர் சஞ்சிகைகளை வெளியிடல் போன்ற நல்ல செயற்பாடுகளை எமது நாட்டில் நடாத்தி வருகின்றன.

சிறுவர் பாதுகாப்பு விடயத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிறுவனங்களும் அமைச்சு மட்டத்தில் திணைக்களங்களும் செயலாற்றி வருகின்றன. இதில் குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பங்கு மகத்தானது.

சிறுவர் பராயமானது கள்ளங்கபடமற்ற மகிழ்ச்சியானதும் கற்றறிந்து கொள்ளும் பருவமாகவும் கொள்ளப்படுகிறது. ஆகவேதான்இ சிறுவர்கள் கட்டாயம் பாடசாலை சென்று கல்வி கற்க வேண்டும். 1997ம் ஆண்டில் 1ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பெற்றோர் 5 வயதிலிருந்து தமது பிள்ளையை ஒரு பாடசாலைக்கு கிரமமாக சென்று கல்வி கற்பதற்கு ஒழுங்குகள் செய்தல் கடமையாகும்.

சிறுவர்கள் கல்வி பெறுவதற்கான உரிமை பற்றி சரத்து 28இ 29களில் கூறப்பட்டுள்ளதுடன் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் சரத்து 32ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ‘தம் ஆரோக்கியம் கல்வி வளர்ச்சி என்பவற்றின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாய் அமையக் கூடிய வேலைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. தொழிலில் அமர்த்துவதற்குரிய குறைந்தபட்ச வயதை வரையறை செய்தலும் தொழில் நிபந்தனைகளை நெறிப்படுத்தலும் அரசின் கடப்பாடாகும்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சட்டங்களினால் சிறுவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற அதே வேளை சிறுவர் மீதான துஷ்பிரயோகத்தினையும் தடுக்க முடியுமானதாக அமையலாம். இதனடிப்படையில் அரசு ஒவ்வாரு மாணவனும் 5–14 வயது வரை கற்பதை சட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்தியுள்ளது.

சிறுவர்களின் உரிமைகளின் அடிப்படையில் அதன் 28இ 29 சரத்துக்களின் படி எல்லாப் பிள்ளைகளும் கல்வி கற்பதற்கான உரித்துடையவர்கள். ஆரம்பக் கல்வியேனும் கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைப்பதை அரசு உறுதி செய்தல் வேண்டும். பிள்ளை கற்பதன் மூலம் சிறந்த ஆளுமைஇ திறன்கள், உடல் உள விருத்திக்கு உட்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு துரதிஷ்டமான நிலைமையேயாகும். இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டு வந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை. பல காரியங்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு வன்முறையாளர்களாக வருவதற்கான சாத்தியமே உண்டு.

சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு எவ்வளவுதான் முயற்சிகள் எடுத்த போதும் அவை அனைத்தையும் மீறிய செயற்பாடாகத்தான் தற்போது நிகழ்கின்ற வன்முறைகளும் அட்டூழியங்களும் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக இலங்கையிலும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளாவன பின்வருமாறு நோக்கலாம்.

1. மோசமான வார்த்தைப் பிரயோகத்தை அவர்களுக்கெதிராக பாவித்தல்.

2. சிறுவர்களை புறக்கணிpத்தல்.

3. சிறுவர் உழைப்பு

4. பாலியல் துஷ்பிரயோகம்

5. யுத்தத்தினால் பாதிப்படைதல் (அகதி வாழ்க்கை)

6. விபச்சாரத்திற்கு அமர்த்துதல்

7. சித்திரவதை

8. போதைப் பொருள் கடத்தலுக்காக இவர்களைப் பாவித்தல்

9. இளவயதுத் திருமணம்

10. கடத்தல்

11. கொலை

இவ்வாறான பல வன்முறைகள் இன்று உலக அரங்கில் சிறுவர்களுக்கெதிராக நடைபெற்று வருவதை எம்மால் அவதானிக்க முடியும். எமது நாட்டிலும் கூட அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற சிறுபிள்ளைகளின் கடத்தல்கள் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகள் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ள அதேவேளை பெற்றோர்கள் மத்தியிலே ஒரு அச்ச உணர்வை உண்டாக்கியிருக்கிறது.

குடும்பங்களுக்கிடையிலே நிலவுகின்ற தனிப்பட்ட கோபங்களுக்காகவும் / குரோதங்களுக்காகவும் சிறுபிள்ளைகள் பலிக்கடாவாக்கப்படுவதை அண்மைய சில துர்ப்பாக்கியகரமான நிகழ்வுகளின் பின்னணி உறுதிப்படுத்தியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

சகலருக்கும் சமவாய்ப்புப் பற்றிய சிந்தனை துளிர் விட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டில் வாழும் அனைத்து சிறுவர்களும் உள ஆரோக்கியமும்இ உடல் ஆரோக்கியமும் கொண்டு முழுமையாக வளர்ச்சிபெற சிறந்த போசாக்குணவும்இ நோய்ப்பாதுகாப்பும் சமூக வன்முறையிலிருந்து விடுதலையும்இ சிறந்த கல்வி அறிவும் பெறுபவர்களாக உறுதிப்படுத்துவது வளர்ந்தோர் அனைவரதும் பொறுப்பாகும்.

உண்மையில் பிள்ளையின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாம் சில நெறிபிறழ்வான விடயங்களை செய்து கொண்டு பிள்ளைகளை அதனை விட்டும் தடுக்க முனைவோமாயின் அது ஓர் அசாத்தியமான நிகழ்வாக மாறுவதனை அவதானிக்கலாம். உளவியலாளர்களின் கருத்துப்படி பிள்ளைகள் முதலாவதாக தமக்குரிய முன்மாதிரி ஆக பெற்றோரின் நடத்தைகளையே பின்பற்றுகிறார்கள் எனக் கூறுகின்றனர்.

‘இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்’ இந்த வாசகத்தின்படி ஒரு நாட்டின் சிறுவர்கள் மதிக்கப்பட வேண்டும். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்லதொரு பிரஜையாக உருவாக்கப்பட வேண்டியது அவசியமானதொன்றாகும். அந்த வகையில் ஒரு குடும்பத்தை எடுத்தால் அந்தக் குடும்பத்தில் சிறுவர்கள் எவ்வாறு மதிக்கப்படல் வேண்டும் என்பதையும் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறுவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், கல்விக்கூடங்களுக்கும் இருக்கின்றது. அதேபோல் பெற்றோர்இ இருக்கும் சூழல் குடும்ப நிலைமை நண்பர்கள் போன்ற இதர காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.

எனவே நாளைய தலைவர்களாக வரவேண்டிய இன்றைய இளம் சிறார்களை அவர்களைச் சுற்றியுள்ள பொறுப்புதாரர்கள் அனைவரும் தத்தமக்குரிய வகிபாகத்தை சரிவர நிறைவேற்றி ஊக்குவிப்பார்களாயின் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு சந்ததியை எதிர்பாரக்கலாம்!

‘மகத்துவம் மிக்கதோர்சிறுவர்கள் சமுதாயத்தினை உருவாக்குவோம்!!!’

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை விடுதி-4 பிரிவில் இன்று இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.