Showing posts with label Sabragamuwe. Show all posts


நூருல் ஹுதா உமர்


சிறந்த ஊடக நெறிமுறைகளை உருவாக்கி போலியான செய்திகளை இல்லாதொழிப்பது தொடர்பில் ஸ்கை தமிழ்  வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையில் புதன்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.ஜே.எம். மன்சூர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை ஊடகப் பிரிவின் பொறுப்பாசிரியர்  ஆர்.மனோகரனின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இச் செயலமர்வில் பாடசாலை ஊடகப் பிரிவை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த இலவச ஊடக செயலமர்வு ஸ்கை தமிழ் பிராந்திய ஒருங்கிணைப்பாளரும்  துணிந்தெழு சஞ்சிகையின் இணை ஆசிரியருமான ஷிஹானா நௌபர் இனால் நடாத்தி வைக்கப்பட்டது. செயலமர்வின் இணைப்பு வேலைகளை துணிந்தெழு சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் சிவபாலன் கற்பஹாசினி மேற்கொண்டிருந்தார்.


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான நுவான் சொய்சா, சர்வதேச கிரிக்கற் பேரவையின் ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். ICC உறுப்புரை 2.1.4, உட்பட பல உறுப்புரைகளை மீறியுள்ளார் என்பதாகத் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார், தனது தேர்தல் பிரசார பிரதான அலுவலகத்தை இன்று இரத்தினபுரி புதிய நகர் பகுதியில் திறந்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட நுவரெலிய மாவட்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை என சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியது.

www.manthri.lk என்ற இணையத்தளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாற்றுகை தொடா்பில் பட்டியலிடும் இணையமாகும். அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் காபந்து அமைச்சருமாகத் தொழிற்படும் பவித்திரா வன்னியாராச்சி 8வது நாடாளுமன்றில் பெண்கள் தொடர்பில் ஆற்றிய பங்களிப்புக்கள் எவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் மின்கம்பங்கள் பலவற்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்திருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 10 மாவட்டங்களில் 30, 719 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்த குடும்பங்களைச் சேர்ந்த 142,177 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இவர்களுள் 2 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். 3,079 வீடுகள் சேதமடைந்துள்ளன, இவற்றில் 75 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.  61 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது 86 மத்திய நிலையங்களில் 10,812 குடும்பங்களைச் சேர்ந்த 44,489 பேர் தங்கியிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற திறந்த பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார். புவியியல், வரலாறு, பௌத்தம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்காக குறித்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகிறது. 


மாவனல்லை ஸாஹிரா 2007 சா/த மற்றும் 2010 உ/த மாணவர்களின் (பிரிவு 77) ஏற்பாட்டில் மாணவ மாணவியரின் ஒன்று கூடல் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நேற்று 10/03 /2019 (ஞாயிறு) நடை பெற்றது. இந்த நிகழ்வின் போது பிரிவு 77 மாணவர்களும் அவர்கள் சார்ந்தோரும் வரவழைக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டனர்.

பிரிவு 77இன் அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பிரிவு 77இன் காலப்பகுதி அதிபர்கள், பிரதி அதிபர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பிரிவு 77இன் தம்பதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 300கும் மேற்பட்ட பிரிவு 77ன் உறுப்பினர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்து சிறப்பித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் இந்த நிகழ்வை கொண்டாடினர். கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் இந்த நிகழ்வானது மாவனல்லை சாஹிராவின் ஆரம்ப பிரிவு கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

துபாயில் வசிக்கும் ஷம்ரான் மற்றும் பாஹிக் தலைமையில் ஒருங்கமைக்கப்பட்ட இந்த விழாவுக்காக பிரிவின் நிர்வாகம் சிறந்த முறையில் தங்களின் முதல் தர பங்களிப்பை முழு மனதுடன் வழங்கி இந்த விழாவை சிறப்பித்தனர். பிரிவின் முக்கிய உறுப்பினர்களான ரிஸ்வான், ஹஸீப், முனாசிர், ரிம்சி, மபாஸ், ரஷாட் மரிக்கார், ஹிலால், ஷப்ரான், சாதிர், இஜாஸ், ஷஹீம், சாகிர், இஸ்ஸத், பயாஸ், ரியாஸ், சமீர், அதீக், இர்பான், அஸ்மத், அஸ்ரி, ரிஷாட், ரிஹான்டீன், அன்பஸ், மேலும் பலர் தங்களது பங்களிப்பை மனப்பூர்வமாக வழங்கி விழாவை மேலும் சிறப்பித்தனர்.

விழாவில் பிரிவு 77 இன் தலைவர் ரிஸ்வான் ரஸ்ஸாக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த ஒன்று கூடலானது தனது நீண்ட கால குறிக்கோளாக இருந்ததாகவும், பழைய மாணவர்களை அவர்களின் திறன்விருத்தி, பரஸ்பர நன்மை மற்றும் ஒத்துழைப்பினூடாக ஒன்றிணைந்து இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி பாடசாலையின் நீண்ட காலக்குறிக்கோள்களை அடைவதற்கான ஒரு பலம் வாய்ந்த சக்தியாகத் தொழிற்படுவதாகும் எனக் குறிப்பிட்டார்.

பெண்கள் பிரிவின் சார்பாக செயற்பட்ட திருமதி. ஜானி கூறுகையில் எமது 77ஆம் பிரிவினூடாக பாடசாலை மாணவியர்களின் கல்வி, இணைப்பாடவிதான செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும், எதிர்கால சந்ததியினரின் கல்வி தரத்தை உயர்த்த பிரிவு 77 இன் சார்பாக தகுந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பெண்கள் பிரிவில் விழாவின் ஏற்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமை தாங்கிய திருமதி. ஹமீஹா பிர்சான் அவர்கள் கூறுகையில், எதிர் வரும் காலங்களில் இதை விட சிறப்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல், பாடசாலை சார்ந்த சமூக பணிகளில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்வை நடத்த உதவிய அணைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

இந்த ஒன்று கூடலை தொடர்ந்து பாடசாலையின் நான்கு இல்லங்களுக்கு இடையிலான புட்ஸால் உதைபந்தாட்ட போட்டி நடை பெற்றது, இதில் அல் அஸ்ஹர், அல் சாஹிரா, கோடோவா, நிசாமியா இல்லங்களை சேர்ந்த பிரிவு 77 இன் அனைவரும் பங்கு பற்றினர். இதில் அல் அஸ்ஹர் இல்லம் சிறந்த முறையில் விளையாடி இந்த தொடரை கைப்பற்றி கொண்டனர். அதேவேளை சளைக்காமல் போராடிய அல் சாஹிரா இல்லம் இரண்டாம் இடத்தையும் கோடோவா இல்லம் மூன்றாம் இடத்தையும், நிசாமியா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

மாவனல்லை சாஹிராவின் பலம் வாய்ந்த பிரிவுகளில் ஒன்றாக பிரிவு 77 இனரை குறிப்பிடலாம். அந்த வகையில் இலங்கை மற்றும் இலங்கைக்கு வெளியில் இருந்து இயங்கிவரும் இந்த பிரிவானது பல துறைகளில் பல்வேறு ஆளுமை மிக்க நபர்களை தம்வசம் கொண்டுள்ளது. மருத்துவ, விஞ்ஞான, சட்ட, கணக்கியல், பொறியியல், வணிகத்துறை, கல்வித்துறை போன்ற அனைத்து துறைகளிலும் தனக்கே உரிய பாணியில் கால் பதித்துள்ளது. இந்த பிரிவை ஸாஹிராவின் பழைய மாணவர் அமைப்பின் ஒரு முக்கிய தூண் என்றால் அது மிகையாகாது.

இந்த பழைய மாணவர் பிரிவு 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், சுமார் 250 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன் இயங்கி வருகின்றது. இந்த பிரிவு ஸாஹிராவின் பழைய மாணவர் பிரிவுகள் மத்தியில் முன்மாதிரி பிரிவாக செயற்படுவதோடு, இந்த ஒன்று கூடலின் பின் தங்களை மீண்டும் நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. எதிர் வரும் திட்டங்களின் மூலம் மேலும் புதிய திசையில் தமது சக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிரிவு 77இன் குடும்பத்தை சிறந்த பாதையில் நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவனல்லை வரலாற்றில் தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்கிய சுமார் 3500 மாணவர்களைக்கொண்ட மாவனல்லை சாஹிரா கல்லூரி, சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ், ஆங்கில மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தர வரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. மாவனல்லை சாஹிராவின் செல்வாக்கு மிக்க இந்த பிரிவானது எதிர்வரும் சாஹிராவின் நூற்றாண்டு விழாவில் தமது பிரிவினூடாக பாடசாலைக்கு எவ்வாறான விதங்களில் தமது பங்களிப்பை வழங்கலாம் என்று இந்த விழாவில் கலந்தாய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

பிரிவு 77 ஐ சார்ந்தவர்கள் இவ்வாறானதொரு நிகழ்வினை ஏற்பாடு செய்தமை இதுவே பாடசாலை வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைற்கல் என்றால் மிகையாகாது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த 77ம் பிரிவின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் 77ம் பிரிவின் நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டது!

ஷம்ரான் நவாஸ் (துபாய்)

கதிர்காமம் விஷ்னு ஆலயத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (03) அதிகாலை பக்தர் ஒருவர் உடலில் தீயிட்டுக் கொண்டு விஷ்னு ஆலயத்திற்குள் நுழைந்ததன் காரணமாக இவ்வாறு தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் தீ பரவலை கட்டுப்படுத்தி தீக்காயங்களுக்கு உள்ளான நபரை ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீயிட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்வபம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)
தற்பொழுது இலங்கையில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கடத்தல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகின்றது. விசேடமாக டுபாய் சம்பவம் தொடர்பில் அதிகமாக அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். அரசியல் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட தமிழ் மகாவித்தியாலயத்திற்கான புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் 09.02.2019 அன்று நாட்டிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் விசேட அதிதியாக சப்ரகமுவ மாகாணத்திற்கான அளுநர் தம்ம திசாநாயக்க கலந்து கொண்டார். பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனும், சிறப்பு அதிதியாக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் துசிதா விஜேமான  ஆகியோரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை  விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மேற்கொண்டிருந்தார். குறித்த பாடசாலை 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவில் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.
இலங்கை போதை பொருள் கடத்தல் காரர்களின் மத்திய நிலையமாக மாறியிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்து வருகின்ற நடவடிக்கைகளை நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.இதுவரை காலமும் இருந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேனவே இதற்கான அதிகமான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமையை காணமுடிகின்றது.
எங்களுடைய நாடு சர்வதேச ரீதியாக போதைவஜ்து கடத்தலில் இன்று பேசப்பட்டு வருகின்றது. நாள் தோறும் கடத்தல்காரர்கள் பிடிபடுகின்றார்கள். அது தொடர்பான செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம். இது நமது நாட்டிற்கு ஒரு நல்ல விடயம் அல்ல. இதனை முற்றாக இல்லாது செய்ய வேண்டும். அதற்காக ஜனாதிபதி எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தற்பொழுது டுபாய் நாட்டில் பிடிபட்டுள்ள எமது நாட்டை சேர்ந்த பிரபல போதை வஸ்து வியாபாரிகளை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்.அவர்களின் மூலமாக இலங்கையில் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுடை பெயர் பட்டியலை அறிந்து அவர்கள் அணைவரையும் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். அப்படி செய்வதோடு அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டு;ம்.இந்த தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தாவிட்டால் போதைப் பொருள் கடத்தலை ஒரு நாளும் இல்லாதொழிக்க முடியாது.
இன்று இந்த தீய பழக்கமானது நாடு பூராகவும் பரவியிருக்கின்றது. இதன் மூலமாக விசேடமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இதனை இலலாதொழிக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது. அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் மருத்துவக் கல்வித் துறையை விரிவாக்கும் நோக்கில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்தாக குருவிட்ட, பட்டுஹேன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ பீடம் எதிர்வரும் 17 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த மருத்துவ பீடத்துக்கான போதனா வைத்தியசாலையாக இரத்தினபுரி வைத்தியசாலை தர மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வும் அதேதினம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த மருத்துவ பீடத்தை திறந்து வைக்கும் தினத்தில் முதல் கட்டமாக 75 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு தினங்களாக (சனி 15.12.2018, ஞாயிறு 16.12.2018) நடாத்தப்பட்ட இந்த புட்சல் போட்டியானது மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. 

பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் இனிதே நிறைவு பெற்ற இந்த போட்டியை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகான அணைத்து பழைய மாணவர்களினதும் சிறந்த ஒன்று கூடுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. 

லீக் முறையில் நடந்த இந்த புட்சல் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ், 25 முதல் 35 வயதெல்லையினர், 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது. இதில் மூன்று குழுக்களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஸ், ரன்னர்ஸ்-அப் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதில் 25 வயதுக்கு கீழ் பிரிவில் "குழு 84" அணி சாம்பியன் ஆகவும் "குழு 87" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கோப்பையை வென்றனர். 25 முதல் 35 வயது வரை பிரிவில் "குழு 78" அணி சாம்பியன் ஆகவும் "குழு 80" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கிண்ணங்களை சுவீகரித்தனர். 35 வயதுக்கு மேல் பிரிவில் "ஓர்கிட் அணி" சாம்பியன் ஆகவும் "குழு 64" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் வெற்றி பெற்று நிகழ்வை அலங்கரித்தனர்.

இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முறையே, திரு. நப்ரின் தாஹிர் (25 வயதுக்கு கீழ் பிரிவில்), திரு. சப்ராஸ் (25 முதல் 35 வயது வரை பிரிவில்), திரு. அஸ்மி ரஷீத் (35 வயதுக்கு மேல் பிரிவில்) சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டு பதக்கங்களை வென்றனர்.  

மாவனல்லை உதைபந்தாட்ட வரலாற்றில் தலை சிறந்த வீரர்களை உருவாக்கிய பதுரியா மத்திய கல்லூரி இந்த நிகழ்வின் மூலம் உதைபந்தாட்டத்தில் தனது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கல்வி மற்றும் இணைபாடவிதான செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் இந்த பாடசாலையானது இந்த நிகழ்வை தனக்கே உரிய சிறப்பம்சங்களுடன் வெற்றிகரமாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

சுமார் 3,000 மாணவர்களைக் கொண்ட பதுரியா மத்திய கல்லூரி, சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தரவரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல பெருமைகளை கொண்ட இந்த பாடசாலை முதல் முறையாக நடத்திய இந்த  நிகழ்வு கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது. கடந்த 8 டிசம்பர் 2018 ஆம் திகதி இந்த விழாவின் மாபெரும் துவக்க நிகழ்வு நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி, துரேகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 12 யுவதிகள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த களியாட்ட நிகழ்வின் போது பிரதேசவாசிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் இருவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 530 மில்லிகிராம், கஞ்சா 4 கிராம் மற்றும் விஷத்தன்மையுடைய போதை மாத்திரைகள் 4 உம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரைத்தவிர ஏனையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வத்தளை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் களுத்துறை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பரீட்சை நிலையத்தில் கடமையாற்றி வந்த, பரீட்சை நிலையப் பொறுப்பாளர் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

கேகலை – ஹெட்டிமுல்ல புதிய கனிஸ்ட பாடசாலையின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலைய பொறுப்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கேகாலை புனித மரியா தமிழ் வித்தியாலயத்தின் அதிபரான 57 வயதான கதிரமலே ஆறுமுகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டதனைத் தொடர்ந்து கேகாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது குறித்த அதிபர் உயிரிழந்துள்ளார்.

போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
நாம் நாட்டைப் பொறுப்பேற்கையில், இலங்கையில் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கொண்டுவரும் கேந்திர நிலையமாக இருந்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்நிலையை மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார்.
பணத்திற்கு அடிமையாகி மற்றொரு பிள்ளையினதோ இளைஞரினதோ வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு தம்மை உண்மையான பௌத்தனென்று சொல்லிக்கொள்வதில் பலனில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே பாதாள உலகக் கோஷ்டியினர் செயற்பட்டனர். எனினும் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் பாதாள உலக குழுவை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது-,
கடந்த ஆட்சியின்போது பாதாள குழுச் செயற்பாடுகள் அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே இடம்பெற்றன. ஆனால் இந்த ஆட்சியில் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுபோன்ற செயற்பாடுகளை நாம் ஒழித்து கட்டுவோம். சிலர் போலியான உறுதிப்பத்திரங்களை தயாரித்து ஏழை மக்களிடமிருந்து காணிகளை அபகரிக்கின்றனர்.இவர்கள் காணிகளை அபகரிக்கும் பாதாள குழுக்கள். சில இடங்களில் ஹோட்டல்களை கொள்ளையிடும் பாதாள குழுக்கள் உள்ளன. இவர்கள் யாருக்கும் புதிதாக ஹோட்டல்களை ஆரம்பிக்க விடுவதில்லை. அதேபோன்று இன்னும் சில இடங்களில் வாகனங்களை கொள்ளையிடும் பாதாள குழுக்கள் உள்ளன.இவற்றை நாம் ஒழித்து அப்பாவி மக்களுக்கு வாழ்வதற்கான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இந்நாட்டில் அதிகமாக போதைப் பொருட்களை கொண்டு செல்வது பெண்கள் என்பதை அறியும்போது நாம் கவலையடைய வேண்டியுள்ளது. சிறைச்சாலைக்கு போய் வந்தால் வாழ்க்கையே வேண்டாம் என்கின்ற நிலை உருவாகும். தற்போது மரண தண்டணையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பெயர் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் முதலாவது பெயரே ஒரு பெண்ணுடையது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற கடமைபட்டுள்ளோம்.என்றாலும் சில அதிகாரிகளுக்கு தமது கடமையின்போது அரசியல் செய்வதனை நிறுத்த முடியாமல் போயுள்ளது. அரசாங்க சேவையென்பது ஐ.தே.க வோ அல்லது சு.கவோ அல்ல.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்க கடந்த 8 ஆம்வந்த பெண், கெக்கராவ, சுதர்ஷகமவில் உள்ள சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சகோதரனின் பிள்ளைக்குச் சிகிச்சை பெறுவதற்காக கெக்கிராவ வைத்தியசாலைக்கு பேருந்தில் சென்று கைலபத்தான சந்தியில் முச்சக்கரவண்டியில் ஏற முயற்சித்த
பெண்ணை கீழே தள்ளிய கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கிராம சேவகரை மடக்க முயன்ற கான்ஸ்டபிளுக்குக் கடி உமாமகேஸ்வரி இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, பெண் கிராம சேவகர் ஒருவர் நேற்று  (07) கடித்துக் காயமாக்கியுள்ளார்.
காயமடைந்த கான்ஸ்டபிள், இறக்குவானை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் அவரைக் கடித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இறக்குவானைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெல்மதுளை பகுதியில் கடமை புரிந்து வரும் காவத்தை வத்தேகந்தையைச் சேர்ந்தவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், மேற்குறிப்பிட்ட கிராம சேவையாளர், இறக்குவானைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர், பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டபோது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை திட்டிய குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அன்றைய தினம் அது பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும், தன்னுடைய மற்றொரு தேவைக்காக நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், பொலிஸ் நிலையத்துக்கு வந்த பெண் கிராம சேவகரைக் கைதுசெய்வதற்கு, பொலிஸ் நிலையத்திலிருந்த பெண் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார்.
கிராம சேவகரை மடக்கிப் பிடிப்பதற்கு அவர் முயன்ற வேளை, கான்ஸ்டபின் வலது கையை, கிராம சேவகர் பலமாகக் கடித்துள்ளார். எனினும் மற்றைய பொலிஸாரால், கிராம சேவகர் கைது செய்யப்பட்டதோடு, கடி வாங்கிக் காயமாகிய கான்ஸ்டபிள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுடைய , தொண்டையில் றம்புட்டான் விதை சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
குறித்த சிறுவன், நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்கராஜ வனத்திலுள்ள இரண்டு யானைகளால், இறக்குவானை - கஜுகஸ்வத்த, கோப்பிகல ஆரம்பப் பாடசாலை, அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இவ்வச்சுறுத்தல் காரணமாக, குறித்த பாடசாலையை மூட வேண்டுமாயின், அதற்கு முன்னர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெறவேண்டுமென, சப்ரகமுவ மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த யானைகள் இரண்டும், கடந்த 20ஆம் திகதியன்று, மேற்படி ஆரம்பப் பாடசாலைக்குள் நுழைந்து, பாடசாலை உபகரணங்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் விளைவித்தது. அதன்போது, பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கமுடியாத காரணத்தால், பாடசாலையை மூட நடவடிக்கை எடுத்ததாக, பாடசாலை அதிபர், ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த பாடசாலையாகும். தாம் இதனை, மீண்டும் இயங்கச் செய்ததால், இதனை அண்மித்த பகுதிகளிலுள்ள பெற்றோர், இப்பாடசாலைக்கே மாணவர்களை அனுப்புகின்றனர். அவர்கள், வருமானம் குறைந்த பெற்றோர்களாவர். குறித்த பாடசாலை மூடப்படுமாயின், 2 - 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கஜுகஸ்வத்த பாடசாலைக்கே, இந்த மாணவர்கள் செல்லநேரிடும். அத்துடன், பாடசாலையை மூடுவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமை, பாடசாலை அதிபருக்கு இல்லையெனக் குறிப்பிட்டார்.
தற்போது, வனஜீவராசிகள் திணைக்களத்தில் பயிற்சிபெற்றவர்களே, இந்தப் பாடசாலை மாணவர்களைக் காலையில் பாடசாலைக்கு அழைத்து வருவதோடு, மாலையில் அழைத்துச் செல்கின்றனரெனத் தெரிவித்த செயலாளர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடியுமென, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், தமக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனரென்றும் கூறியுள்ளார்.
இந்த யானைப் பிரச்சினையானது, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதங்களுக்கிடையில் ஏற்பட்டப் பிரச்சினையாகுமெனத் தெரிவித்துள்ள சப்ரகமுவா மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்,  குறித்த யானைகள், மேற்படி பாடசாலையின் வாயிலுக்கு அருகில் சென்று, அங்கிருந்த வாழைத் தோட்டத்தைச் சேதபடுத்தியுள்ளன என்றும் இதனைக் காரணங்காட்டி, பாடசாலையை மூடுவதற்குப் பெற்றோர் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.