துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 30 வயது இளைஞர் ஒருவர் அகால மரணம்
ஓட்டமாவடி பிரதேசத்தில் வேட்டைக்குச் சென்ற போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 30 வயது இளைஞர் ஒருவர் வபாத்; ஒருவர் கைது!
(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி - மஜ்மா நகரில்
துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (12) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞன் வபாத்தாகியுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.