Showing posts with label Judiciary. Show all posts



கடந்த 18.09.2024 முதல்  அமுலுக்கு வரும் வகையில், மீஉயர் நீதிமன்ற ஓய்வு நிலை  நீதியரசர் சித்ரசிறி மற்றும் மேல் நீதிமன்ற ஓய்வு நிலை நீதிபதி திருமதி.எஸ்.நந்தசேகரன், ஆகியோர்  (Administartive Appeals Tribunal) நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நியமிக்கப்படுள்ளனர் 

2002 ஆம் ஆண்டின் 04 ஆம்   நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயச் சட்டத்தின் பிரிவு 2 இன் விதிகளின் மூலம் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் நீதிச் சேவை ஆணைக்குழு, கட்டுரையின் கீழ் நிறுவப்பட்ட நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக இவர்கள் தற்சமயம்  செயற்படுகின்றனர்





 


-றிப்தி அலி-


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 

இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இந்த நீக்கலுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

 

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அக்கட்சியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது. 

 

-றிப்தி அலி-


 


உண்மையில் என்ன நடந்தது என்ற நிதர்சனம் புரியாமல் வெவ்வேறு நபர்கள் இப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்க முயற்சிப்பதையும், கருத்து தெரிவிப்பதையும் அவதானிப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது.


கற்றறிந்த நீதிவான் அவர்கள், கெளரவ சட்டமா அதிபர் தன்னை அவரது திணைக்களத்துக்கு வரவழைத்து தனது உத்தரவை மாற்றச் சொன்னார் என்ற கற்றறிந்த நீதிவானின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும்.


மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 7 எழுத்தாணை விண்ணப்பங்களில் மூன்றில் கற்றறிந்த நீதிவான், தனது அதிகாரப்பூர்வ /தனிப்பட்ட கோதாவில் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த வழக்குகள் 11.10.2023 அன்று ஆதரிப்பதற்காக அழைக்கப்பட இருகின்றன.


இந் நிலையில்14.09.2023 ஆந் திகதி, கெளரவ சட்டமா அதிபரின் உதவியைக் கோரியும், அவருக்காக ஆஜராகுவதற்கு அரச சட்டவாதி ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறும் அவர் நீதிச் சேவை ஆணைக் குழுவை எழுத்து மூலம் கோரியிருந்தார். 


நீதிச் சேவை ஆணைக் குழுவானது தனது 15.09.2023 எனத் திகதியிட்ட கடிதத்தின் மூலம் கற்றறிந்த நீதிவான் சார்பில் மேன் முறையீட்டு நீதி மன்றில் ஆஜராகுமாறு கெளரவ சட்டமா அதிபர் அவர்களை கோரி இருந்தது.


இந்தப் பின்னணியில், அதிகாரிகளின் தேவையான ஒப்புதலுடன் 21.09.2023 அன்று கற்றறிந்த நீதிவானுடன் ஆலோசனை நடாத்த கெளரவ சட்டமா அதிபர் முடிவு செய்தார்.


எனவே முதலில் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயம், தனது உத்தரவை மாற்றுமாறு கற்றறிந்த நீதிவானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக கெளரவ சட்டமா அதிபரினால் கற்றறிந்த நீதிவான் சட்டமா அதிபர்  திணைக்களத்திற்கு "அழைக்கப்பட்டிருக்கவில்லை"  மாறாக கற்றறிந்த நீதிவான் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு சேவை நாடுனராகவே, சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.



எனவே இது உண்மையில், சட்டத்தரணி-சேவை நாடுனருக்கிடையேயான உறவின் அடிப்படையில் அமையப்பெற்ற ஒரு சந்திப்பாகும்.


திணைக்களத்துடனான கூட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுவிட்டு, அவருக்கே நன்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக,

அவர் இந்த அபத்தமான/ பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.




இந்த சந்திப்பின் உண்மையான நோக்கத்திற்கு அவர் ஒரு திருப்பத்தை கொடுப்பது மிகவும் நெறிமுறையற்றதும் தொழில்முறையற்றதுமாகும்.


மேற்கூறியவை இந்த முழுச் சம்பவத்தின் சரியான உண்மைப் பின்னணியாகும்.






 


நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஊதியம் இல்லாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடுப்பு கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


நீதித்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் சேவை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னதாக விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், தொடர்புடைய சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழு இந்த தீர்மானம் தொடர்பாக அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.