Showing posts with label SriLanka. Show all posts

 


நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை 05, 06, 07ம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிளை புனரமைப்புக் கூட்டம் இன்று 18.05.2024 தொழிலதிபர் பீ.ரீ.அப்துல் மஜீத் (கபீர்) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் இன்று இந்தோனேசியாவில் எலென்மஸ்க்கைச் சந்தித்து இலங்கையில் Starlink ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார் மற்றும் உலகளாவிய Starlink வலையமைப்புடன் SLஐ இணைக்க விண்ணப்ப செயல்முறையை துரிதமாக கண்காணிப்பதில் உறுதியளித்தார் - PMD #LKA #SriLanka #Starlink


நூருல் ஹுதா உமர்
பெண்களுக்கு மார்க்க கல்வியை புகட்டி வரும் நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை கையளிக்கும் நிகழ்வும், நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக்கல்லூரி வளர்ச்சி தொடர்பிலான கலந்துரையாடலும் இன்று (18) நடைபெற்றது.
நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் தலைவரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட கிளை செயலாளருமான விரிவுரையாளர் மௌலவி ஏ.எல். நாஸர் கனி (ஹாமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதரஸாவில் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.

இதன்போது நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நலன் கருதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை மதரஸா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது பிரின்ஸ் காலேஜ் இற்கான நிதி ஒதுக்கீட்டு கடிதத்தையும் நிர்வாக இயக்குனர் எம்.எம். றியாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் மக்கள் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள், தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி பிரதி அதிபர் ஏ.எம். சாலிதீன் (ஹாமி), செயலாளர் ஐ. பாயிஸ், பொருளாளர் எம்.ஐ. யாகூப், இயக்குனர் சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.தௌபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பிட்டிமுனை மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஜௌபர், உதவி செயலாளர் எம்.ஐ. நிரோஷ், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், மாணவிகள், அவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  கிழக்குபல்கலைகழக மாணவர்களின் தற்காலிக நினைவகத்தை அழித்த பொலிஸார் – அம்பிகா சற்குணநாதன் கடும்; கண்டனம்

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல்அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 நூருல் ஹுதா உமர் 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டாலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது. 

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் தலைமையில் காரைதீவு, நிந்தவூர், இறக்காமம் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகளும், அந்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார அதிகாரிகளும், பொதுச் சுகாதார அதிகாரிகளும் இணைந்து நடாத்திய உணவு நிலைய பரிசோதனைகளில் 67 நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த 13 நிறுவனங்களில் இருந்து பெருமளவான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டது. இதன் போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 நிறுவனங்களுக்கு எதிராகவும் 105,000/- தண்டம் அறவிடப்பட்டது.

இந் நிகழ்வில் பங்கு கொண்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம். ரயீஸ், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கும் அவர்களது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எல்லோருக்கும் தமது நன்றிகளை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.


மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் : அபிவிருத்தி பணிகளுக்காக நிதியும் ஒதுக்கினார் !
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற மருதமுனை கமு/கமு/ அல்- மனார் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயம் செய்து பாடசாலையின் கல்வி அடைவு மட்டங்கள், பௌதீக மற்றும் ஆளணி விடயங்கள், கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கல்லூரி முதல்வர் ஐ. உபைதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எம்.எம். அனஸ், ரஸ்மி மூஸா, உதவி அதிபர் எம்.எஸ். நிஹால், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் ரீ. றிஹான் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு பாடசாலையின் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் கலந்துரையாடினர்.
இதன்போது மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி மேம்பாட்டுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை பாடசாலை அதிபர் ஐ. உபைதுல்லாஹ் விடமும், பெண்கள் பிரிவின் கடிதத்தை பிரதி அதிபர் எம்.எம். அனஸ் அவர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலின் நிதி ஒதுக்கீட்டு கடிதத்தையும் பள்ளிவாசல் பொருளாளர் எஸ்.எம். றபாயிடீனிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். ஹாரீஸ் (நவாஸ்), பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டிட நிர்மாண பணிகளுக்கென ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ். கலீஸ், செயலாளர் எம்.எஸ். சஹுதுல் ஹலீம், பொருளாளர் எஸ்.எச். அபுல் கலாம் ஆகியோர் அடங்களாக பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் மருதமுனை மக்களின் பிரச்சினைகள், குறை நிறைகளை ஆராய்ந்ததுடன், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் இதன்போது மருதமுனை பளீல் மௌலானா பௌண்டஷனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்களையும் பௌண்டஷனின் நிறைவேற்று குழுவினரிடம் ஹரீஸ் எம்.பி கையளித்தார்
இதன்போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எஸ். உமர் அலி, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்  விஜயதாச ராஜபக்ஷ, பதில் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தடை விதித்து கடுவெல மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேதாந்தி MH. சேகு இஸ்ஸதீன் 80 வது அகவையில் கால் பதிக்கின்றார்.

இதனை முன்னிட்டு, அக்கரைப்பற்று  கடற்கரை  கொக்கோ கார்டன் முன்றலில்
வேதாந்திக்கு வெற்றி விழாக் கொண்டாட்டம் இன்று மாலை இடம்பெற்றது


 ( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி வரும் போராட்டம் நாளை (13) திங்கட்கிழமை ஐம்பது நாட்களை எட்டுகிறது.

அதையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பாரியமனித பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது.

பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


ஊர்வலம் ஊர்வலமாக சுமார்  4000 பொதுமக்கள் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் 
கல்முனை தமிழர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49 வது நாளாக அப் போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

இன்று சுமார் 4000 பொது மக்கள் பங்கேற்ற பேரணி வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து தரவைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பிரதேச செயலகமனத்தை அடைந்தனர்.மிக நீண்ட நேரம் மக்கள் கோஷங்களை எழுப்பி பதாதைகளை தாங்கிய வண்ணம் வலம் வந்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பது  தொடர்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும் தார் வீதியில் தமது யதார்த்தங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளுடன் நடைபவனியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து மக்கள்போராட்டத்தில் கலந்துகொண்டமை ஏனைய மக்களையும் உணர்ச்சி வசப்படுத்திய து.


 




க.பொ.த (சா/த) பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை அண்மையில் பரீட்சையின் போது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 (வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம்.
உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் .

மருதமுனையைச் சேர்ந்த பணிப்பாளர் உமர் மௌலானா திடீர் சுகவீனமுற்று 
கடந்த ஒரு சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பனிரெண்டு மணி அளவில் காலமானார்.

டாக்டர் உமர் மௌலானா 1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வந்தார்.

2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபராக சீரிய சேவையாற்றியிருந்தார்.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் ஒன்பதாவது  பணிப்பாளராக 20.01. 2023 சேவையில் இணைந்தார் .
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 60 வயதில் ஓய்வு பெறவிருந்தார்.

சம்மாந்துறை வலயத்தில் 15 மாதங்கள் கடமையாற்றி வந்தவேளையில் இன்று இம் மரணம் சம்பவித்திருக்கின்றது.

 சம்மாந்துறை வலய கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விசார் கவ்வி சாரா ஊழியர்கள் மாணவர் அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.


வி.சுகிர்தகுமார் 0777113659   


 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்; பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரி ஆர்.திரவியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (9) கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னதாக பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய த.கஜேந்திரன்; இன்று கடமையினை கையளித்தார்.
இந்நிலையில் இன்று காலை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக கடமையாற்றிய ஆர்.திரவியராஜ்; ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
இதன் பின்னராக கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அவரது தாயாரிடம் ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இதேநேரம் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளருக்கு முன்னாள் பதில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்; உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக அரச உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சமய தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டனர்.
இதன் பின்னராக பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலிலும் தனது குடும்ப சகிதம் பங்கேற்றுக்கொண்ட அவர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இறுதியாக பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.
இவர் வெல்லாவெளி மற்றும் நிந்தவூர் அம்பாரை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றியதுடன் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் இறுதியாக கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக கடமையாற்றிய நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் மருத்துவ மாதுக்களின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை சர்வதேச மருத்துவ மாதுக்கள் தினம் கொண்டாடப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எஸ்.எம்.பாயிஸ், வைத்தியர்கள், தாதிய மேற்பார்வையாளர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், உத்தியோகத்தர்கள்,  சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வில் பலரும் வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர். கல்முனைப் பிராந்திய வைத்திய அதிகாரி றிஸ்வின் அவர்கள் Online மூலமாக தனது வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்

 


உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை (101/7) வீழ்த்தி இலங்கை (169/5) சாம்பியன் பட்டத்தை வென்றது


 பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(08) கூடுகின்றது.

இந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று ஏழாவது நாளாகவும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்ப காரணமாக 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு இன்று உரிய தீர்வு வழங்கப்படாவிடின் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக S.பிரியந்த தெரிவித்துள்ளார்.

 


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும்.


கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது.


தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.


இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.


குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.


உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - எவ்வாறு பெறுவது?

1 மே 2024

மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள்

27 ஏப்ரல் 2024

இ-விசா சலுகை

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம்.


சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது.


அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.


இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்த பயண செலவு

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும்.


சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்' எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.


இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது," என்கிறார்.


விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.


குற்றாலத்தைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்க

இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா?

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது.


அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம்.


இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.


இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர்.


ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன்.


மற்ற செலவுகள் எப்படி இருக்கும்?

இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார்.


“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது," என்றார் பாலாஜி.


இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவர மாலத்தீவு எடுத்துள்ள முயற்சி பலனளிக்குமா?


கடலில் மிதக்கும் 'விண்மீன்கள்' - நீங்கள் இந்த அற்புத காட்சியை எங்கே, எப்போது பார்க்கலாம்?


தவறவிடக்கூடாத இடங்கள்

இலங்கை சுற்றுலா பட மூலாதாரம்=

கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும்.


இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிஸ்ஸ, பெந்தோட்டை போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம்.


காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யால, உடவலவ போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும்.


இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்ல, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும்.


இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம்.


வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'அதிக எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் ‘எச்சரிக்கை நிலை’ எதிர்பார்க்கப்படுகிறது. #இலங்கை

 






சர்வதேச தொழிலாளர் தினத்தைச் சிறப்புக்கும் வகையில், அக்கரைப் பற்றிலும் அனுஷ்டிக்கப்பட்டது. மருந்தகங்கள், ஒரு சில உணவகங்கள் தவிர, ஏனைய நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.


(எஸ்.அஷ்ரப்கான்)

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சகல இடங்களிலும் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அதனைக்கையாளும் நிறுவனங்கள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் பிரதேசத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் சகல நிறுவனங்களும் அதனைக் கையாளும் நிறுவனங்களும் எதிர்வரும் 2024.05.31ஆம் திகதிக்கு முன்னர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அத்துடன் உணவுகளை தயாரிப்பவர்களும் அதனைக் கையாளுபவர்களும் மேற்குறித்த திகதிக்கு முன்னர் கட்டாயமாக மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

உரிய காலத்துக்குள் பதிவு செய்தல் மற்றும் மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் மேலும் தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.