பலத்த மழையினால் பல அனர்த்தங்கள்




கடுங்காற்று மற்றும் பலத்த மழையினால் நாட்டின் சில பகுதிகளில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
பாலத்துறை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடுங்காற்றினால் ப்ளுமென்டல் வீதியில் வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மருதானை – ரீட் மாவத்தை, டொரிங்டன் மற்றும் கிரஹரி வீதியில் இரண்டு கார்கள் மீது மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
ஹுணுப்பிட்டிய ஜயந்தி மஹால் சந்தியில் லொறி ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிசை விகாரை வீதியில் வாகனத் தரிப்பிடம் ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் சொத்துக்களுக்கு சேதம் ஏறட்டுள்ளது.
மாதம்பிட்டி – ஹேனமுல்ல பிரதேசத்தில் சுமார் 150 வீடுகளுக்கு காற்றினால் சேதம் ஏறபட்டுள்ளது.
கொழும்பு நகரின் பல பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் கொடக்கவெல எல்பிட்டி பிரதேசத்தில் மரம் ஒன்று மின்சாரக் கம்பியில் வீழ்ந்தமையினால் 57 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ பொதுபிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மரம் வீழ்ந்தமையினால் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பதுளை – கொழும்பு ரயில் வீதியில் தெமோதர பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டது
பண்டாரவளை மற்றும் பெரகல பிரதேசங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.