எரிபொருள் விலை எகிறுகிறது




எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் 

இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 148 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார். 

அதேநேரம் ஒட்டோ டீசல் 109 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது. 

அத்துடன் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது. 

இதேவேளை சமுர்த்தி பயனாளிகளுக்கும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய்யை பழைய விலையான 44 ரூபாவுக்கே பெற்றுக்கொள்ளாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஐஓசி நிறுவனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபகத்தினால் விலை அதிகரிக்கப்படவில்லை.