மனிதர்கள் இடையேயான பரஸ்பர புரிந்துணர்வுகளுக்கு சிறந்த முன்னுதாரணம் ஹஜ்ஜுப் பெருநாள்




பிரிவினைகளால் சிதறிப்போயுள்ள மானிட சமுதாயத்தில் மனிதர்களுக்கு இடையே இருக்க வேண்டிய பரஸ்பர புரிந்துணர்வுகளுக்கு சிறந்ததோர் முன் உதாரணமாகவே ஹஜ்ஜுப் பெருநாள் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

உலகெங்கும் வாழும் பல இலட்சக்கணக்கான இஸ்லாமிய பக்தர்கள் ஒரே குறிக்கோளுடன் ஒன்றிணைந்து ஒரே புண்ணிய தலத்தில் ஒன்றுகூடி மானிட சமுதாயத்தின் ஏகோபித்த எதிர்பார்ப்பான ஒற்றுமையின் பெருமையை உலகறியச் செய்யும் ஹஜ்ஜுப் பெருநாள், சமூக வாழ்வின் மகிமையை உலக மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு முதன்மையான சமய நிகழ்வாகும். 

புண்டைய காலம் தொடக்கம் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடும் போது மானிடர்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்துள்ளனர் என்பதை மனித வரலாற்றை நோக்கும் போது எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)