(க.கிஷாந்தன்)
#DeathofWPC
பதுளை - ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 01.09.2018 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 23 வயதுடைய ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியை சேர்ந்த சந்திமா பியதர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவர் 01.09.2018 அன்று பகல் நேரத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றையும் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அதன்பின்னே இவ்வாறு அவரது வீட்டில் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதோடு, பெரும் முயற்சிக்கு மத்தியில் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், குறித்த பெண் கான்ஸ்டபிள் குறித்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இந்த சம்பவத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment