உபகரணங்கள் பயனாளிகளுக்கு

(க.கிஷாந்தன்)
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள், பாடசாலைகளுக்கான உபகரணங்கள்,  தோட்டப்புற மக்கள் மத்தியில் சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாக உபகரணங்கள் என்பன 15.11.2018 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.காவின. தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் 15.11.2018 அன்று மதியம் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், நோர்வூட், அக்கரப்பத்தனை, அம்பகமுவ, மஸ்கெலியா, கொட்டகலை, நுவரெலியா ஆகிய பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சின் சுமார் 4 கோடி ரூபா செலவில் நுவரெலியா மாவட்டத்தின் பல தோட்டப்பகுதிகள் உள்ளடங்களாக மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.