மாப்பாகந்தயில் நீராடச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் உயிரிழப்பு

(க.கிஷாந்தன்)

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 22.12.2018 அன்று இடம்பெற்றுள்ளது.

அட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தையுடைய இருவரும் உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேலை குறித்த மாப்பாகந்த ஆற்றில் நிராட சென்ற குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய அப்துள் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  பலியான இருவரின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடவுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்


--- Advertisment ---