அக்கரைப்பற்று, காத்தான்குடி மில்லத் ஹோட்டல் ஊழியர்கள் பிணையில்


(இர்சாத்)
அக்கரைப்பற்றில், இயங்கி வந்த காத்தான்குடி மில்லத் ஹோட்டேல் ஊழியர்கள் 10 பேரும் இன்று அக்கரைப்பற்று கெளரவ நீதிபதி பொருமாள் சிவக்குமார் அவர்களால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நேற்றைய தினம், அக்கரைப்பற்றில் இராணுவ அதிகாரிகள், விசேட அதிரப்படையினர்,பொலிசார் இணைந்து நடத்திய தேடுதலின்  போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக, அக்கரைப்பற்றுப் பொலிசார இன்று நீதிமன்றில் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள் சார்பில்,சட்டத்தரணிகள் ஏ.எச்.சமீம்,சல்மான் பாஹிம், இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 2009ம் ஆண்டிலிருந்து, குறித்த நபர்கள் அக்கரைப்பற்றில் எவ்வித பிரச்சினைகளுமின்றி, தொழில் புரிந்து வருவதாகவும், இவர்களிடமிருந்து, சந்கேத்துக்கிடமாக எவ்விதப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லையென்றும்,இவர்களின் பெயர்கள் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புற்றிருக்கவில்லையென்றும் வாதிட்டனர்.
மேலும், இவர்களின் காத்தான்குடி வதிவிடத்தை உறுதிப்படுத்திய கிராம சேவையாளரின் அத்தாட்சிப்படுத்திய கடிதத்தையும் மன்றின் மேலாக கவனத்திற்குக் கொண்டு வந்து பிணை வழங்கக் கோரினர்.

10 சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா 2 சரீரப் பிணையில் செல்லுமாறும்,பிரதி வெள்ளிக் கிழமை தோறும் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் அக்கரைப்பற்று நீதிபதி பெருமாள் சிவக்குமார் உத்தவிட்டார்.