2-ஆம் உலகப் போர் 74-வது நினைவு தினத்தை முன்னிட்டு

இரண்டாம் உலகப் போர் 74-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர் வீரர் நினைவு சின்னத்தில் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் பிரான்சு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, பிரெஞ்சு தூதரக அதிகாரி கொய்ரா டிரால்ட் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஏராளமானோர் கலந்துகொண்டனர்.