விராட் கோலி விளாசல்: வெளியேறிய பெங்களூரு அணி


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் ஆட்டம், மழையால் பாதிக்கப்பட்டு ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்டு இறுதியில் எந்த முடிவும் இல்லாமல் நிறைவடைந்தது.
இதனையடுத்து பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுவது உறுதியானது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆனால், டாஸ் முடிந்தவுடன் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் சுமார் 11 மணி அளவில் ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி தரப்பில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே 23 ரன்களை அவர்கள் குவித்தனர்.
மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் விளாசிய விராட் கோலியை அவுட் ஆக்கினார் ஷ்ரேயஸ் கோபால். அடுத்தடுத்து வில்லியர்ஸ், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரை அவுட்டாக்கி ஹேட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார் ஷ்ரேயஸ்.
சஞ்சு சாம்சன்படத்தின் காப்புரிமைBCCI
Image captionசஞ்சு சாம்சன்
இறுதியாக ஐந்து ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்களை பெங்களூரு அணி குவித்தது.
63 ரன்களை இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
முதலில் சஞ்சு சாம்சன் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் களமிறங்கினார்கள். மூன்று ஓவர்கள் முடிவில் 40 ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி.
ஆனால், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் ஆட்டம் தடைபட்டு, இறுதியாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.