மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி: அஷ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒருநாள் போட்டிகள், டி20, மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 போட்டிகளுக்கான அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது.
தோனிக்கு இந்த போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
விரலில் ஏற்பட்ட காயத்தினால் உலகக் கோப்பை அணியில் இருந்து பாதியில் விலகிய ஷிகார் தவான் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆகஸ்டு 3ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

டி20க்கான அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா(துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், புவனேஷ்வர் குமார், கலில் அகமத், தீபக் சஹர், நவ்தீப் சைனி

ஒருநாள் போட்டிக்கான அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட்,(விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஷ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், மொகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமத் மற்றும் நவ்தீப் சைனி

டெஸ்ட் போட்டிக்கான அணி

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மாயங் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், விரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, மொகமத் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் உமேஷ் யாதவ்
சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து, ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு மேற்கு இந்திய தீவுகளில் போட்டிகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement