அவசர காலச் சட்டம் நீடிப்பு




அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது சரத்திற்கு அமைய ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அவசர காலச் சட்டத்தை அமல்படுத்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.