வைத்தியர் ஷாபியின் தடுப்பு காவல் உத்தரவு இரத்து

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு வழங்கப்பட்டிருந்த, 3 மாத கால தடுப்புக் காவல் உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வைத்தியர் ஷாபி, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான  வழக்கு விசாரணைக்கு எடுத்து ​கொள்ளப்பட்ட போது, இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சிகள் போதுமானதாக இல்லை எனத்  தெரிவித்து, நேற்றைய தினம் வழங்கப்பட்ட தடுப்பு காவல் உத்தரவையும் இரத்துச் செய்வதாக பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசின் முதலிகே அறிவித்துள்ளார். 


--- Advertisment ---