இலங்கை குழாம்

நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியின் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பெயரிடப்பட்டுள்ளார். 

15 வீரர்களை உள்ளடக்கிய இந்த அணியின் உப தலைவராக நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். 

15 வீரர்களின் பெயர்கள் வருமாறு,
1. லசித் மாலிங்க - தலைவர்
2. நிரோஷன் திக்வெல்ல – உபத் தலைவர்
3. ஆவிஷ்க பெர்ணான்டோ
4. குசல் ஜனித் பெரேரா
5. தனுஷ்க குணதிலக்க
6. குசால் மெண்டீஸ்
7. சேஹான் ஜெயசூரிய
8. தசுன் ஷானக்க
9. வனிது ஹசரங்க
10. அகில தனஞ்சய
11. லக்ஷான் சந்தகென்
12. இசுறு உதான
13. கசுன் ராஜித
14. லஹிரு குமார
15. லுஹிரு மதுஷங்க 

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


Advertisement