ஒலுவில் விபத்தில் உயிர் நீத்த இப்றால்லெப்பையின் ஜனாசா உறவினர்களிடம் ஒப்படைப்பு

#ST.Jamaldeen
அம்பாறை ஒலுவில் பிரதானவீதிச் சந்தியில் நேற்று (11) பிற்பகல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாகஅக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி திரு.ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.

உயிர் இழந்தவர் ஒலுவில்-6ஆம் பிரிவைச்சேர்ந்த 70 வயதுடையசீனித்தம்பி இப்றாலெப்பைஎன பொலிசார் தெரிவித்தனர்.

உயிர் இழந்தவர் வீதியை கடக்க நடந்து சென்றபோது கல்முனை பிரதேசத்தில் இருந்து அட்டாளைச்சேனை நோக்கி வந்த மோட்டார்  சைக்கிள் நடந்து சென்றவர் மீது மோதியதாலேயே இவ்விபத்து இடம் பெற்றது
விபத்தில் உயிர் இழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்து, பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் இன்று சனிக்கிழமை முற் பகல் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.--- Advertisment ---