முன்னாள் நீதியமைச்சர் சிரேஸ்ட சட்டத்தரணி பெடீ வீரகோன் காலமானர்

லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நீதிமன்ற மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சருமான சிரேஸ்ட சட்டத்தரணி பெடீ வீரகோன் இன்று (07) காலமானார்.
1939ம் ஆண்டு பிறந்தவர் இவர் என்பதுடன், இவரது மனைவியும் சட்டத்தரணி என“கது குறிப்பிடத்தக்கது.

அவரின் இறுதிக்கிரியைகள் இம்மாதம் 10 ஆம் திகதி பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அன்னாரின் பூதவுடல் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தை, இலக்கம் 121 இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.