சுஹாசினி. இருக்காங்க

பிரம்மாண்டமான ஆரம்பம்! தமிழ் திரையுலகத்திற்கு மக்கள் சூட்டப்போகும் மகுடம்... இது நம்ம திரையின் திருவிழா என்று ஜீ தமிழ் டிவி ட்விட்டர் வலைத் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திரைப்படத் துறையின் அத்தனை கலைஞர்களிலும் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து ஜூரியுடன் இணைந்து இந்த பிரமாண்ட விழாவை மிக நேர்மையாக நடத்த உள்ளது ஜீ தமிழ் டிவி.

இதில் படங்களை பார்த்து கலைஞர்கள், சிறந்த படம் என்று அனைத்தையும் தேர்ந்தெடுக்கும் குழுவில் இயக்குநர் கவுதம் மேனன், நடிகையும் இயக்குநருமான சுஹாசினி, இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரும் இடம் பிடித்து உள்ளனர்.

இயக்குநர் கரு.பழனியப்பன்

இயக்குநர் கரு.பழனியப்பன்
இது மிகவும் பெருமைக்கு உரிய விஷயம்.. மக்கள் தேர்ந்தெடுக்கும் கலைஞர்கள், திரைப்படங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என்று நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படும். ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்தே இந்த விருதுக்கானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று கூறினார்.

கமல் கட்சி பெயரை அறிவிப்பதற்கு முன் நடந்தது இது....!


சிறந்த படங்கள், கலைஞர்கள் என்று அனைத்தயும் தேர்வு செய்யும் குழுவில் நானும் இடம்பெற்று உள்ளேன் என்பது மட்டுமின்றி இயக்குநர் கவுதம் மேனன் சார் மற்றும் சுஹாசினி மேடத்துடன் நான் பங்கேற்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று சொன்னார்.


விருது வாங்கும் இடத்தில் இருந்த நன் விருது வழங்கும் இடத்துக்கு தேர்வாகி உள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சி. 20 வயதில் விருது வாங்கும்போது நான் என்ன மகிழ்ச்சியில் திளைத்தேனோ அதே மகிழ்ச்சி பலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று சொன்னார்.


இயக்குநர் கவுதம் மேனன்
இயக்குனர் கவுதம் மேனனும் தனது பங்குக்கு ஜூரியுடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஜூரி குழுவில் இருவர் இவர்களுடன் பங்கேற்க உள்ள நிலையில், கரு. பழனியப்பன், கவுதம் மேனன், சுஹாசினி மூவரின் புரஃபைல் புகைப்படங்களை அழகாக வெளியிட்டு உள்ளது ஜீ தமிழ் டிவி.


Advertisement