அக்கரைப்பற்று நீதிமன்றினால், கனரக வாகனச் சாரதிக்குப் பிணை


#ST.Jamaldeen.
அக்கரைப்பற்று அம்பாரை வீதி  6 வது மைல் கல் அருகாமையில், வியாழன் மாலை இடம்பெற்ற விபத்தில்,  அக்கரைப்பற்று #கானுஸ் இலக்ரிகல்ஸ் உரிமையாளர்  அல்ஹாஜ் பரீத் அகால மரணமடைந்தார்.



இவர் சென்ற ஸ்கூட்டி ரக மோட்டார் வண்டி,கனரக 3 மோதியதால் கடுங்காயமுற்ற இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினமே மரணமடைந்தார்.


இதேவேளை, குறித்த கனரக வாகனச் சாரதியை நே்றறு பின்னிரவில் அக்கரைப்பற்றுப் பொலிசார், அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி பெருமாள் சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை,( 12/13) வெள்ளிக் கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தவிட்டார். 

விளக்கமறியில் வைக்கப்பட்ட அம்பாரையைச் சேர்நத சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.. அவரது சார்பில் சட்டத்தரணிகள் இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான், ஜெனீர் ஆகியோர் ஆஜராகினர். 

குறித்த, கனரக வாகனத்தின் பின் புறத்தில், இறந்தவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் சென்று மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதென்றும், கனரக வாகனச் சாரதி  சாதரண வேகத்தில் வாகனத்தைச் செலுத்தி வ்நதுள்ளார் என்றும், குறித்த சாரதியானவர் பொறுப்புடன் செயற்பட்டு விபத்துக்குட்பட்டவரை வைத்தியசாலைக்கு அனுப்பியுமுள்ளார் என்பதுடன், இவரைப் பிணையில் செல்ல அனுமதிப்பதனால், அமைதியின்மை ஏற்படாது என்றும்,வெள்ளிக் கிழமையான இன்றைய தினத்தில் ஜனாசா நல்லடக்கம் இடம்பெறுவதாகவும் சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான், குறித்த சாரதியினைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் விண்ணப்பம் செய்திருந்தார்.

அக்கரைப்பற்று பொலிசாரின் சமர்ப்பணத்தையும்  செவிமடுத்த கௌரவ நீதிபதி, குறித்த சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா, இரண்டு சரீரப் பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.