உச்சம் தொட்டார்.சுந்தர் பிச்சை


கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை கடந்த 3ம் தேதி நியமிக்கப்பட்டார். அதேபோல், கூகுளின் தலைமை செயலதிகாரியாகவும் சுந்தர் பிச்சை செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சுந்தர் பிச்சையின் ஊதியத்தை பெருமளவு உயர்த்தியிருக்கிறது ஆல்பாபெட் நிறுவனம். அவரது ஆண்டு ஊதியம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.14.22 கோடி) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் அமெரிக்க பங்கு சந்தையில் ஆல்பாபெட் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து 240 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,707 கோடி) அளவுக்கு அவருக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக 90 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுந்தர்பிச்சை பெற்றிருக்கிறார். ஆல்பாபெட் நிறுவன செயல்பாடுகளைப் பொறுத்து 2022ம் ஆண்டு இறுதிக்குள் மேலும், 120 மில்லியன் மற்றும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க பங்குச் சந்தை ஆணையமான எஸ்.இ.சியிடம் (S.E.C) ஆல்பாபெட் நிறுவனம் இந்தத் தகவல்களை சம்ர்ப்பித்திருக்கிறது. சுந்தர் பிச்சை குறித்து பேசிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின்,``கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரைவிட எவராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது” என ஊழியர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தனர்.
`இவரைவிட யாராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது!’- ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை

Also Read

`இவரைவிட யாராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது!’- ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சைSubmit

நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுவது ஆல்பாபெட் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். மிகப்பெரிய தொகையைப் பரிசாகப் பெறுவது சுந்தர் பிச்சைக்குப் புதிதல்ல. கடந்த 2016-ல், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு 200 மில்லியன் அமெரிக்க டாலர் அவருக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, `ஏற்கெனவே அதிகமாக சம்பளம் பெற்றதாக உணர்கிறேன்’' என்றுகூறி தனக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை அவர் நிராகரித்தார்.
Sundar pichai
Sundar pichai
``சிலிகான் வேலியில் சில ஊழியர்கள் வாழ்வதற்கே கஷ்டப்படும்போது, சுந்தர்பிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது” என இந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டத்தில் சிலர் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தால் ஆல்பாபெட் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.