குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

கராய்ச்சியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணி சார்பில், அசாத் சபிக் 63 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

விஷ்வ பெர்ணான்டோ இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது


Advertisement