ரணில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீங்க வேண்டும்!

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்பதே தனத நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க கடந்த 25 வருடங்களாக ஐ.தே.கவின் தலைமை பதவியை வகிப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய நிலையில் கட்சியின் பாராளுமன்ற குழுவில் உள்ள சிலர் மாத்திரமே அவர் தலைவராக தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.

எனவே மாற்றிடாக ஐ.தே.கவின் தலைமைக்கு சஜித் பிரேமதாச தெரிவாக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Advertisement