தம்பலாவத்தை பகுதியில், தைலத்தை அருந்திய ஒன்றரை வயது குழந்தை பலி


கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியாகிய சம்பவமொன்று வெல்லாவெளியில் பதிவாகியுள்ளது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த கடந்த புத்தாண்டு தினத்தில் (01) மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த குழந்தை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு (3) குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தது.

1 வயதும் 6 மாதமும் உடைய ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த குழந்தையின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடு ஒன்றில் பணி புரிந்து வருகின்றார் .

சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்திலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-