#இத்தாலி உயிர்க்கிறது

கொரோனா தொற்று ஆரம்பம் அறியப்பட்ட மிதக்கும் நகர் வெனிஸில் கோண்டோலியர்ஸ் படகுகள் மீண்டும் ஓடத் தொடங்குகின்றன. வெனிஸில், குறைந்த பட்சம் ஜூன் வரை சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படாவிட்டாலும், கோண்டோலியர்கள் மீண்டும் சவாரிகளை வழங்கத் தொடங்கியுள்னர்.

வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லொம்பார்டியாத் தலைநகர் மிலானில் பிளெக்ஸிகிளாஸ் தடைகளுக்குப் பின்னால் மதிய உணவு. காஃபிகள், பார்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க, சேவைகள் வழங்கப்பெறுகின்றன. இத்தாலி மீண்டும் உயிர்த்தெழுந்தது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் முடங்கிப் போன இத்தாலி மெல்ல எழுந்து இயக்கத் தொடங்குகிறது.Advertisement