தெளி கருவிகள் வழங்கி வைப்பு

வி.சுகிர்தகுமார்
 

  பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு முன்ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு ஆதரவாக பல்வேறு அரசசாhபற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதுடன் உதவிகளையும் வழங்கி வருகின்றது.

இதற்கமைவாக தொற்று நீக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் பாடசாலைக்கான தொற்று நீக்கி தெளிகருவிகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு முன்னுதாரணமாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் சுவாட் என அழைக்கப்படும் அம்பாரை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பானது பாடாசலைகளில் கொவிட் 19 வைரஸ் பரவாமல் பாதுகாக்கும் வகையில் பாடசாலைகளுக்கான தெளிகருவிகளை பெற்றுக்கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

சுவிஸ் டெவலப்மன்ட கோப்பரேசன் பண்ட் நிதியீட்டதுடன் கொள்வனவு செய்யப்பட்ட நான்கு தெளிகருவிகளை பாடாசலையின் அதிபர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி; ஆகியோரிடம் இன்று கையளித்தது.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி;; எஸ்.அகிலன் தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று (24)இடம்பெற்ற நிகழ்வில் சுவாட் அமைப்பின் தலைவர் வி.பரமசிங்கம் சுவாட் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் க.பிறேமலதன் உள்ளிட்ட பாடசாலையின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயம், கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கும் ஒவ்வொரு தொற்று நீக்கி தெளிகருவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Advertisement