இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், 9 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 2 பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 17 பொலிஸாருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், ஹட்டன், யாழ்ப்பாணம், சிலாபம் ஆகிய பொலிஸ் பகுதிகள், தீவிரவாத தடுப்பு பிரிவு, பிரதமர் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு இவ்வாறு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement