கோளாவிலில் கொண்டாட்ட நிகழ்வுகள்

 வி.சுகிர்தகுமார்  


  நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பதவியேற்பை கொண்டாடும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகளை எற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்திற்கு முன்பாகவும் நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட தலைமை வேட்பாளரும்; தேர்தலின்போது பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஆதரவு வழங்கியவருமான தாமோதரம் ஜெயாகர் தலைமையில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

அங்கு ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடிக்கச் செய்து விழாவை ஆரம்பித்ததுடன் இனிப்பு பண்டங்களை வீதி வழியாக சென்றவர்களுக்கும் அங்கு குழுமியிருந்தவர்களுக்கும் வழங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு பான்ட் வாத்திய குழவினரின் இசையோடு நடனம் ஆடி கொண்டாட்டத்தினை சிறப்பித்தனர். கொண்டாட்ட நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Advertisement