20வது திருத்தத்தின் சில பகுதிகளை நிறைவேற்ற மக்கள் ஆணை அவசியம்



இலங்கை அரசியல் அமைப்பின் 20 வது திருத்தத்தின் சில சரத்துக்களான நாடாளுமன்றைக் கலைப்பதற்கான ஜனாதிபதிக்குள்ள அதிகாரம், ஜனாதிபதியின் விடுபாட்டு உரிமை போன்றவற்றை  நிறைவேற்ற மக்கள் கருத்துக்கணிப்பும், மேலும் சில பிரிவுகளை நிறைவேற்ற விசேட பெரும்பான்மையும ் தேவை என்பதாகத்  தெரியவருகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலமானது  நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் 39 வழக்குகள் இலங்கையின் உச்ச நீதிமன்றில், தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதே வேளை இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான  தமது பொருள்கோடலை, இலங்கையின் மீ உயர்மன்றானது, அண்மையில் சபாநாயகருக்கு அறிவித்திருந்தது.

இதனை எதிர்வரும் 20 ந் திகதி நாடாளுமன்றில் அதன் அங்கத்தவர்களுக்கு, அறியத்தரவுள்ளாதாக சபாநாயகர் ஏலவே அறிவித்துள்ளார்.