14 மத்திய கிழக்கு நாடுகளில் 70 பேர் வரை உயிரிழப்பு


#RA.Pirasaath.

 14 மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களில், சுமார் 3000திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள அதேவேளை, அவர்களில் சுமார் 70திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்கள் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களின் ஊடாக, வெளிவிவகார அமைச்சுக்கு இந்த விடயம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிகளுக்கு சென்று, உடன்படிக்கை காலம் நிறைவடைந்த சுமார் 45000திற்கும் அதிகமானோர், தாயகம் திரும்ப முடியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அந்தந்த நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய சுமார் 2700 இலங்கையர்கள் குணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

கொவிட் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த சுமார் 12000திற்கும் அதிகமான இலங்கையர்கள், அரசாங்கத்தின் தலையீட்டில் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.Advertisement