உலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர், மரடோனா மறைவு

 


டீகோ அர்மேண்டோ மரடோனா (பிறந்தது 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பியூனோஸ் ஏரிஸ் நகரத்தின் லானுஸ்) அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மற்றும் அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளர் ஆவார். இவர் எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.


மரடோனா தனது தொழில்வாழ்க்கையில் கால்பாந்து கிளப்பில் இருந்த காலத்தில் அவர் அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற மன்ற அணிகளுக்காக விளையாடி ஒப்பந்தப் பண அளவில் உலக சாதனை செய்துள்ளார். தனது சர்வதேச விளையாட்டு வாழ்கையில் அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி, 91 கேப்புகளைப் பெற்றுள்ளார் மற்றும் 34 கோல்களை அடித்துள்ளார். 


1986 ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக வெற்றி பெற தலைமை தாங்கிய போட்டியுடன் சேர்த்து நான்கு ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார், மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார். இந்த போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இவர் அடித்த இரண்டு கோல்கள் இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காக கால்பந்து வரலாற்றில் இடம் பெற்றது. தண்டம் விதிக்கப்படாத முறையில் முதலில் அடித்த கோல் "கடவுளின் கை" என்று அறியப்பட்டது, அதே வேளையில் இங்கிலாந்தின் ஆறு வீரர்களை தாண்டி 60-மீட்டர் தொலைவிலிருந்து அடிக்கப்பட்ட இரண்டாவது கோலானது கண்ணைக் கவரும் விதத்தில் இருந்ததால் இந்த "நூற்றாண்டின் சிறந்த கோல்" என்று பொதுவாக அறியப்படுகிறது.


விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்றும் செய்திகளில் அதிகமாக பேசப்படும் நபர் என்றும் பல்வேறு காரணங்களுக்காக மரடோனா அறியப்பட்டார். இத்தாலியில் நடைபெற்ற போதைப் பொருள் சோதனையில் கோக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் 1991 ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டிலிருந்து 15 மாதங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டார், மற்றும் எபெட்ரின் பயன்படுத்திய காரணத்திற்காக அமெரிக்க ஒன்றியத்தில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலிந்து வெளியேற்றப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார்.


1997 ஆம் ஆண்டில் தனது 37 வது பிறந்தநாள் முதல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு,[4] கொக்கைன் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை எடை கூடுவதை தடை செய்வதற்கு உதவியது. கொக்கைன் பழக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு அர்ஜென்டினாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இவர் மிகவும் பிரபலமானார்.


இவரது வெளிப்படையான பேச்சு நிருபர்கள் மற்றும் விளையாட்டு உறுப்பினர்களுடன் சச்சரவை சில நேரங்களில் ஏற்படுத்தும். மேலாண்மையில் அவருக்கிருந்த முன்னனுபவம் குறைவு எனினும், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார்.

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.

பிறகு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

மாரடோனா

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அதன் துணை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தபோதும் நின்று போன அவரது மூச்சை மீட்டெடுக்க அவர்களால் இயலவில்லை.

தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertisement