இறக்காமம் பிரதேச சபை பட்ஜெட்,தோல்வி


 இறக்காமம் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்கினால் தோக்கடிக்கப்பட்டுள்ளது.

இறக்காம்ம் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ஜே.கே.றஹ்மான் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த அமர்வின் போது அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை தவிசாளர் ஜே.கே.றஹ்மான் சபையில் சமர்ப்பித்தார்.சபையில் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வாக்களிப்பிலும் 12 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆதரவாக 05 ஐந்து உறுப்பினர்களும், எதிராக 07 உறுப்பினர்களும் வாக்களித்தனர். வரவு செலவுத் திட்டம் மேலதிக இரண்டு வாக்குகளால் தோக்கடிக்கப்பட்டது.

இச்சபையானது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 4 உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 3 உறுப்பினர்களையும் இணைத்து ஆட்சியை கைப்பற்றி நடாத்தி வந்தது.இதில் தவிசாளர் பதவி சுதந்திர கட்சிக்கும் உப தவிசாளர் பதவி அ.இ.ம காங்கிரசிக்கும் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 5 உறுப்பினர்கள் எதிர்தரப்பிலும் உள்ளனர். 13 உறுப்பினர்களை கொண்ட இச் சபையின் அமர்வில் 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தவிசாளருடன் 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அ.இ.ம காங்கிரசின் 3 உறுப்பினர்களும் மு.கா வின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். எதிராக 3 உறுப்பினர்களும் மு.கா வின் 4 உறுப்பினர்களுமாக 7 பேர் வாக்களித்தனர்.

பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மரணமடைந்ததால் புதிதாக எவரும் இது வரையும் நியமிக்கப்படவில்லை.

இறக்காம்ம். பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜே.கலீலுர் ரஹ்மான், பிரதி தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏ.எல். நௌபர் (மௌலவி) செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Advertisement