ஆலையடிவேம்பில் இடர் கால பணி


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கான இடர்கால உலர் உணவுப்  பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக அம்பாறை ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் பிரிவிலும்; நேற்று ஆரம்பமான பணிகள் தொடர்ந்தும் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.
சுமார் 6056 பேருக்கான தலா 10ஆயிரம் ருபா பெறுமதியான 6 கோடி ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணியின்  இரண்டவாது நாளாக இப்பணி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் பணிப்புரை மற்றும் அவரது ஒத்துழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதியின் கண்காணிப்பின் கீழ் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களின் பங்களிப்போடு பொருள் விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக இன்று  கண்ணகிராமம் 1  மற்றும் சின்னப்பனங்காடு பனங்காடு சின்னமுகத்தவாரம் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கான 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று    வழங்கி வைக்கப்பட்டன.
இப்பொதியில் அரிசி சீனி பருப்பு கோதுமைமா பால்மா பைக்கற் மற்றும் பெண்களுக்கான கைஜின் பொருட்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம்; ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொடர்ந்தும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் நடைபெற்றுவரும் நிலையில் 7 பேர் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.