காத்தான்குடியும் முடக்கமும்


சட்டத்தரணி, றிஸ்வி.

1. வலிந்து திணிக்கப்படும் பிழையான முடிவுகளை வெளிப்படுத்தவல்ல அன்டிஜன் சோதனைகள்


2. முடக்கம் செய்யப்பட்ட பிரதேசங்களுக்கான அரச நிவாரணம் இன்று வரை மக்களுக்கு வழங்கப்படாமை


3. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித அரச நிவாரணமும் இன்று வரை வழங்கப்படாமை


3. தன்னார்வத் தொண்டர்கள் மேற்கொண்ட நிவாரணப் பணிக்கான அனுமதி முற்றிலும் இடைநிறுத்தப்பட்டமை


4. யுத்தப் பிரதேசம் போன்று இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பிரதேசம் கொண்டுவரப்பட்டமை. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகரித்த கெடுபிடிகள்


5. கொரோணா தலைவிரித்தாடிய இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இல்லாதவாறான நடைமுறைகள். உ+ம், ATM இயந்திரங்கள் மூடப்பட்டமை


6. இதனால் வெளியூர்களிலுள்ள தமது உறவுகள், நண்பர்களிடத்தில் இருந்து கூட இவ்விக்கட்டான சூழ்நிலையில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை


7. கடனுக்கு கூட அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் பணத்தைப பெற்று தமது பசியைப் போக்க வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலை


8. நாளாந்த கூலி வேலை செய்து பிழைப்பு நடாத்தும் குடும்பங்கள் உட்பட பொதுவில் அனைத்து மக்களினதும் வறுமையுடன் கூடிய பட்டினியான சூழ்நிலை


9. நிர்வாகப் பயங்கரவாதத்தின் சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்த அகோர முகங்கள்


10. டொக்டவ்ன் முடிந்தாலும் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதா நிறுத்திக்கொள்வதா என்ற சிந்தனையில் வியாபார சமூகம்


11. அதிகரித்த விலையேற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் சந்தர்ப்பம் பார்த்து கழுத்தறுக்கும் வியாபாரிகள்


12. பட்டினிச் சாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஏழைகள்


13. மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோயின் தாக்கத்தினால் அவதியுறும் மக்கள்


14. வறுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஊர்

Advertisement