இதுவரை 558 கொவிட்-19LKA தொடர்பான மரணங்கள்

 


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (26) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 557 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மரணத்துடன், இலங்கையில் இதுவரை 558 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்