நல்லடக்கம் தொடர்பான வழிகாட்டல் சுற்று நிருபம்


 


கொரோனா ஜனாஸா நல்லடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின!


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டல்கள் நேற்று (03) சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, இதில் குறிப்பிட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே உடல்கள் அடக்கம்  செய்யப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஈ.பி.ஐ.டி. 400/ 2019 எனும் இலக்கத்தை உடைய 2020 ஜனவரி 04ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபம், 21.07.2020 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபம் ஆகியவற்றை திருத்தியே டி.ஜி.எச்.எஸ்./ கொவிட் – 19/347 – 2021 எனும் இந்த புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.


சுகாதார அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்ட, சடலத்தை அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்வதற்கான இடங்கள் மட்டுமே இறுதிக் கிரியை தொடர்பில் பயன்படுத்தப்படல் வேண்டும் எனவும் இந்த சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ளது.


பொறுப்பளிக்கப்படும் சுகாதார ஊழியர்கள் மட்டுமே சடலங்களை கையாள வேண்டும் எனவும் சடலமானது அடக்கம் செய்யப்படவோ, தகனம் செய்யப்படுவதற்காகவோ உறவினர்களிடம் ஒப்படைக்கப் படல் கூடாது எனவும் சடலத்துடன் தொடர்புபடும் அனைவரும், நிலையான தொற்று தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் போதுமான அளவு சுகாதார பாதுகாப்பு சாதனங்கள் தொடர்ச்சியாக அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் எனவும் சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான சடலங்களை ‘ எம்பம்’ செய்தல் கூடாது எனவும் சடலத்தை அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் அடக்கம் அல்லது தகனம் இடம்பெறவேண்டும் எனவும் சடலங்களை பார்ப்பது சுகாதார வசதிகளுடன் கூடிய இறுதிக் கிரியை இடம்பெறும் இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குடும்பத்தை சேர்ந்த ஐவர் மட்டுமே சடலத்தை பார்க்க அனுமதிக்கப்படல் வேண்டும் எனவும் மத அனுஷ்டாங்களை முன்னெடுக்க இரு மதகுருக்களை அனுமதிக்கலாம் எனவும் அதிகபட்சம் சடலத்தை பார்வையிட 10 நிமிடங்கள் வழங்க வேண்டும் எனவும் இவை உரிய அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெற வேண்டும் எனவும் புதிய வழி காட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சடலத்தை பார்வை இட அனுமதிக்கும் போதும் பிரேத பையில் சடலம் இடப்பட்டிருக்க வேண்டும் என வழி காட்டலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பெட்டிகள் கண்டிப்பாக மரணித்தவரின் தரப்பினால் வழங்கப்படல் வேண்டும் எனவும் பிரேத பெட்டிகள் எந்த காரணித்துக்காகவும், அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் இடங்களில் திறக்கப்பட மாட்டாது எனவும் புதிய வழி காட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அடையாளம் உறுதி செய்யப்படாத சடலங்கள் கண்டிப்பாக தகனம் செய்யப்படும் என இந்த வழி காட்டலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன் தகனம் செய்யபப்டும் சடலங்களின் சாம்பலை உறவினர்களுக்கு அவர்களது கோரிக்கைக்கு அமைய வழங்க முடியும் எனவும், கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் இறுதிக் கிரியை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்


#Muslim #Janaza #Lanka #Tamil #News #CTV #lka #Memo