மம்தா பேனர்ஜி மருத்துவமனையில் அனுமதி


நந்திகிராமில் தேர்தல் பணியில் ஈடுபட்டபோது தான் தாக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வருகின்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பேனர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

எனவே அங்குத் தேர்தல் பணிக்காக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். முன்னதாக புதன்கிழமையன்று காலை அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

தன்னைச்சுற்றி காவலர்கள் யாரும் இல்லாத சமயத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் தன்னை தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.