திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர்,கே. வி. ஆனந்த் மரணம்


 


கே. வி. ஆனந்த் ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்திதமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார்.