நோன்பை முறிக்கும் விஷயங்கள் எவை?


 


நோன்பை முறிக்கும் காரியங்கள் விஷயங்கள் யாவை.?


By:Raza(AA.L)

01) நோன்பை முறிக்கும் விஷயங்கள்:


உடலுறவில் ஈடுபடுதல்

சாப்பிடுவது, குடிப்பது

மாதவிடாய் ஏற்படுதல்

பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்

வேண்டுமென்றே வாந்தியெடுப்பது

முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம்  இந்திரியம் வெளிப்படுத்துவது

நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்

இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்


02) நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?


A) நோன்பை முறிக்காத செயல்கள்:


வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது


கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்


இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்

சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)


குளித்தல், நீந்துதல்

வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது

பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)


வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)


வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது


வாய்கொப்பளிப்பது

வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.


வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது

நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


கண்ணுக்கு சுருமா இடுதல்


03) நோன்பின் சுன்னத்துக்கள் யாவை?


1) ஸஹர் செய்தல் 


2) விரைந்து நோன்பு துறத்தல் 


3) துஆச் செய்தல்


04) ஸஹர் செய்வதன் சிறப்பு யாது?


A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)


இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.


05) நோன்பின் நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?


பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)


06) நோன்பின் நிய்யத்தை எவ்வாறு வைக்க வேண்டும்?


நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!


07) நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?


யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)


08) நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுமா?


A) “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)


09) நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ எது?


A) ‘தஹபள் ளமவு வப்தல்லதில் உரூக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’


பொருள்: தாகம் தனிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.


*🌀Doha Express News✔️*

10) எதைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும்?


A) கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.


11) ரமலான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்) சிறப்பு என்ன?


A) ‘எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (புகாரி, முஸ்லிம்)


அதிகமாகவே அறியாத மக்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்காகவும் பகிர்ந்து அறியபடுத்துவோம்.