கல்முனை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசின் சுகாதார திணைக்களம், பாதுகாப்பு படை, பொலிஸார் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் கல்முனை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (5) கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம்.சித்தீகின் தலைமையில்  நடைபெற்றது.

இதன் போது நடைமுறை சாத்தியமான அளவுக்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்பதை   மூன்றாம் அலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில்  நாங்கள் ஆராய வேண்டும் .பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள்  பொதுச் சுகாதார பரிசோதகர்களின்  வழிநடத்தலில் நாங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  முழு நேரமும் நாங்கள் முகக்கவசம் அணிந்து இருப்பது அவசியமாகும் . 

அத்தோடு நமது கடைகளில் வேலை புரியும் ஊழியர்கள் உட்பட எமது வாடிக்கையாளர்களும் அதன்படி முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டியது அவசியமாக உள்ளது .   ஒரு மீட்டர் இடைவெளி பேணுவதும் அவசியமாகிறது . இதன்பிரகாரம் கடை உரிமையாளர்கள் ஆகிய நாங்கள் எங்களது வியாபார நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கை கழுவுகல் அல்லது தொற்று நீக்கி தெளித்தல் மூலமும் முகக்கவசம் இன்றி வரும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முகக்கவசத்தை வழங்குவதன் மூலமாகவும் தொற்றை பரவாமல் தடுக்கலாம் .

 தற்போதைய கொரோனா வீரியம் கூடியது ஆகையால் நாங்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும் இ எங்களுக்கும் எங்களை சார்ந்தவர்களுக்கும் எங்களது குடும்பத்தினருக்கும் இந்த நோய் எங்களால் பரவுவதை தடுக்க முடியும் ஆக அன்பான வர்த்தகர்களே ! நீங்கள் மேற்குறிப்பிட்ட ஒழுங்கு விதிமுறைகளை ஒழுகி நடக்குமாறு எமது அரசாங்கமும் வைத்திய துறையும் எங்களை வேண்டுகிறது . பண்டிகைக் காலமான இக்காலத்தில் சன நெரிசல்கள் ஏற்படுமிடத்து கடைகளுக்குள் கவனமான முறையில் குறைந்த அளவு வாடிக்கையாளர்களை அனுமதிப்பதுடன் மிக அவதானம் செலுத்தவும் . 

கடந்த காலங்களில் நாங்கள் குறிப்பாக கல்முனை வர்த்தகர்கள் வஞ்சிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாக கடைகள் மூடப்பட்டு சொல்லொணா துயரத்தையும்  நஷ்ட்டத்தையும் அனுபவித்ததை நாம் அறிவோம் . ஆகவே எதிர்காலத்தில் அப்படிப்பட்ட தவறுகள் ஏற்படாமல் நாங்கள் எங்களைப் பாதுகாக்க வேண்டும் . மேற்குறிப்பிட்ட விதிமுறைகனை ஒழுகி நடக்குமாறு கல்முனை வர்த்தக சங்கம் உங்களிடம் மிகவும் வினயமாக வேண்டிக்கொள்கின்றது  என துண்டுப்பிரசுரம் ஒன்றினையும் வெளியிட்டு குறித்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பளார் டாக்டர் ஜீ.சுகுணன், கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சுஜித் பிரியந்த, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை பொலிஸ் நிலைய கொரோனா கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹீட், கல்முனை வர்த்தக சங்க செயலாளர் எஸ்.எல். ஹமீட், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கல்முனை பொலிஸார், வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்த இந்த பேரணியின் போது சுகாதார விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு சுவரொட்டிகள், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.