மும்பையில் கட்டடம் இடிந்து 11 பேர் பலி மும்பையின் நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு வீடு இடிந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டடம் இடிந்ததைத் தொடர்ந்து அருகில் வலுவற்றுக் காணப்படும் பிற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கட்டடம் இடிந்தபோது குழந்தைகள் உள்பட ஏராளமானோர் உள்ளே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை கன மழை பெய்ததால், ஏற்கெனவே பலவீனமாக இருந்த கட்டடம் இடிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.