இது.... இயற்கையால் உலகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனை..!


 நாட்டில் கொரோனா தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் பொது முடக்கலை விதிக்காவிட்டால், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது கடினமான பணியாக இருக்கும் என தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ, இயற்கையால் உலகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே தான் இந்த தொற்றை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

கண்டி - எசல பெரஹரவின் சம்பிரதாயபூர்வமான தேன் பூஜையில் நேற்று கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொவிட் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், அத்துடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

- Kayal