"முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கிவரும் அரசாங்கத்திற்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்"

சுகிர்தகுமார் 0777113659 

  உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கிவரும் அரசாங்கத்திற்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் என அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள்; கருத்து தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையினை தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியினையும் பாரட்டினையும்  தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நமது நாடும் அதற்கு முகம் கொடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நிலை காரணமாக இதுவரையில் 1600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் அன்மையில் கூறியிருந்தார். ஆனாலும் அதனையும் தாண்டி அரசாங்கம் மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றது.
பல நாடுகளில் தடுப்பூசியினை பணம் கொடுத்து பெறுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் நமது நாட்டின் அரசாங்கம் முற்றும் முழுதாக இலவசமாக தடுப்பூசியினை வழங்கி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது.
மேலும் வீடுகளில் முடங்கி கிடக்கின்ற முதியவர்களுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் சுகாதாரத்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்போடு நடமாடும் சேவை மூலமும் தடுப்பூசியினை வழங்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் இங்கு வாழும் பெரும்பலான மக்கள் சினோபாம் இரண்டாவது தடுப்பூசியினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மாறாக நலமுடனேயே உள்ளோம்.
 இதன் காரணமாக இன்று ஓரளவேனும் தொற்று கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்தமட்டிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு காரணமாக இருந்து செயற்பட்டுவரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் என பலருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.