ஆலையடிவேம்பில் பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று முதல் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 18 தொடக்கம் 19 வயது வரைக்குமான பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் பாடசாலை கல்வியை நிறைவு செய்து வெளியேறிய மாணவர்களுக்குமே இவ்வாறு  தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு வருவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேநேரம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம் கல்முனை பிராந்தியத்தில் பல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறுவதுடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் பாடசாலைகள் யாவும் திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகளும் தங்கு தடையின்றி இடம்பெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகளில் வைத்தியர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கடமையாற்றி வரும் நிலையில் பாடசாலை ஆசிரியர்களும்; இணைந்து மாணவர்களை பதிவு செய்தல் மற்றும் ஒழங்குபடுத்தல் விழிப்பூட்டல் நடவடிக்கை என பல்வேறு செயற்பாடுகளில் முற்றும் முழுதாக ஈடுபட்டு வருகின்றனர்.