நபி அவர்களின் பிறந்த தினம்




 


முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, அரபு மாதமான ரபியுனில் அவ்வலில் பிறை 12 ந் நாளில் திங்களன்றுப் பிற்ந்தவர். இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு[1]), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என நம்புகின்றனர்.


முகம்மது நபி ஒரு கணிப்பின் படி கிபி 570இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறைத்தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார் முகம்மது நபி.

மதீனா வாழ்க்கை

முதன்மைக் கட்டுரை: முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை

மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.[43][44] முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார்.[45] மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.[46]


முகம்மது நபியின் போர்கள்

முதன்மைக் கட்டுரை: முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள்

மக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்குத் தொல்லைக் கொடுத்தார்கள். அவர்களைச் சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார். பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார்.[47]


மக்கா வெற்றி

48:27 உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.


முகம்மது நபி ஹிஜ்ரி 8 இல் ரமலான் 17 அன்று (கி.பி.630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்துச் சென்றார். இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது.[48][49][50]


இறுதிக் காலம்

இறுதி ஹஜ்

மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மதீனா திரும்பினார்.[51] அதில் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.


இறப்பு

தமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது காய்ச்சல், தலைவலி மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார்.[52] அவர் கி.பி.632 ஆம் வருடம் சூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில் 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார்[53], அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.


முகமதுநபி(ஸல்) திருமணம் செய்த பெண்கள்

33:28 நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். 33:29 ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.


கதிஜா

சௌதா பிந்த் சமா

ஆயிஷா

ஹவ்சா பிந்த் உமர்

சைனாப் பிந்த் குசைமா

உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா

யுவேரியா பிந்த் ஹரித்

உம் ஹபிபா ரம்லா

சபியா பிந்த் ஹீயாய்

மைமுனா பிந்த் அல் ஹரித்