அக்கரைப்பற்றில்




 .




சுகிர்தகுமார் 

  நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் அரச அரசார்பற்ற நிறுவனங்கள் வங்கிகள் வியாபார நிலையங்கள் என்பன மூடப்பட்டிருந்தன.
அத்தோடு அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிட நிலையமும் வெறிச்சோடிக்காணப்பட்டது.
ஆயினும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்;ட சிறிய வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று திறக்கப்பட்டிருந்த ஒரு சில வர்;த்தக நிலையங்கள் பொலிசாரின் தலையீட்டை அடுத்து மூடப்பட்டன.
அத்தோடு பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகளும் பிரதான வீதிகளில் இடம்பெற்றன.
காலிமுகத்திடல் சம்பவத்தை அடுத்து அக்கரைப்பற்று சாகாமம்  பிரதான வீதியிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன இணைப்பாளருமான பி.எச்.பியசேனவின் வீட்டிற்கு முன்பாகவும் நேற்றிரவு டயர்கள் எரிக்கப்பட்டபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.