வின்னர் விருது மட்டக்களப்பு ரோட்டரி கழகத்திற்கு




 


(வி.ரி. சகாதேவராஜா)

 மட்டக்களப்பு ரோட்டரி கழக முன்னாள் தலைவரும் ஆளுநருமான அமரர் என். பத்மநாதன் ஞாபகார்த்த வின்னர் விருது மட்டக்களப்பு ரோட்டரி கழகத்திற்கு கிடைத்துள்ளது .

இந்த விருது வழங்கும் விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது .

கடந்த ஆண்டில் சிறந்த திட்டங்களை மேற்கொண்டமைக்காக முதல் வின்னர் வெற்றியாளர் விருது  மட்டு ரோட்டரி கழகத்திற்கு கிடைத்தது. இவ் விருதை மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத் தலைவர் ரோட்டரியன் பு. ரமணன் பெற்றுக்கொண்டார்.

 திருமதி மங்களேஸ்வரி பத்மநாதன் இவ் விருதுடன் 25 ஆயிரம் பணப்பரிசையும் வழங்கி வைத்தார் .

மட்டு .ரோட்டரி கழக தலைவர் ரமணன் இந்த 25 ஆயிரம் ரூபாய் பணப் பரிசை சர்வதேச ரோட்டரி நிதியத்திற்கு அந்த இடத்திலேயே அன்பளிப்பு செய்தார்.
 மேலும் அமரர் பத்மநாதன் ஞாபகார்த்த போட்டியில் முதல் இடத்தை கண்டி ரோட்டரி கழகமும் இரண்டாவது இடத்தை கிளிநொச்சி ரோட்டரி கழகமும் பெற்றுக் கொண்டது . அவர்களுக்கு முறையை 15,000 ரூபாய் 10,000 ரூபாய் பணப்பரிசை திருமதி பத்மநாதன் வழங்கி வைத்தார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில்  நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் ,மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் இது வழங்கி வைக்கப்பட்டது.

 
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ் விழாவில் கலந்து சிறப்பித்தார்.

போலியோ தடுப்புப்  பிரச்சாரம், சுனாமி மற்றும் மருந்துத்  தட்டுப்பாடு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு  காலத்தில்  முகங்கொடுக்க நேரிட்டது.  இந்த நெருக்கடிகளின் போது  ரொட்டரி கழகம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

மாநாட்டின் தலைவரும் ரொட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான    அனீஷா தர்மதாச, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய 3220 மாவட்டத்தின்  ஆளுநர் புபுது செய்சா,மாவட்ட ஆலோசகரும் முன்னாள் தலைவருமான  பிரதீப் அமிர்தநாயகம்  ஆகியோர்  இங்கு உரையாற்றினர்.

இந்நிகழ்வில் சர்வதேச  ரொட்டரி தலைவர் திருமதி ஜெனிபர் ஜோன்ஸ் அவர்களின் பிரதிநிதியான  திருமதி வலேரி வேஃபர், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.