கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு
 


பாறுக் ஷிஹான்


நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை -கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டம். 

தொழிற்சங்க நடவடிக்கையின் போது கல்முனை பிரதேச ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (05) கல்முனை தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் இன்று (15) புதன்கிழமை முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக கல்முனை கல்வி வலயப் பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவின்மையால் வெறிச்சோடிக் காணப்பட்டது. 

அத்துடன், ஆசிரியர்கள், மாணவர்கள் வரவின்மையால், மூன்றாம் தவணைப்பரீட்சையும் இன்று புதன்கிழமை நடைபெறாமல் மற்றுமொரு  தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.